திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற
இக்கருத்தமர்வில் திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோரிகள் நிர்மலா, பிரியா, மற்றும் பிரியதர்சினி ஆகியோர் கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் ஊடாக பங்கேற்பாளர்களை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 150 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 50 பெற்றோரும் பங்குபற்றி பயனடைந்தனர்.

