இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள தியாகதீபம் தீலிபன் அவர்களின் நினைவுத்தூபியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அவரின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கமும், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

By admin