தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆலய பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தை மாதம் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய ஆலய பங்குப்பணிமனைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

