இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால பக்தி இசைகளான பசாம், புலம்பல், வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.
அமைச்சின் பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா, ஆசிரிய ஆலோசகர் திரு. யோண்சன் ராஜ்குமார், இசைத்தென்றல் திரு. இயேசுதாசன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நிகழ்வுகளை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம், அருட்தந்தையர்கள், திணைக்கள பணியாளர்கள், மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த கலைஞர்களென பலரும் கலந்து பயனடைந்தனர்.

