நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானமும் தொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வும் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர், பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான தியானம் மற்றும் கருத்தமர்வு என்பன இடம்பெற்றன.

கருத்தமர்வு மற்றும் தியான நிறைவில் குணமாக்கல் வழிபாடும் திருப்பலியும் நடைபெற்றன.

தியானத்தை இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்தை கப்புச்சீன் சபை அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினர் இணைந்து முன்னெடுத்ததுடன் தொடர்பாடல் கருத்தமர்வை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் தலைமையிலான குழுவினர் நெறிப்படுத்தினர்.

By admin