தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வு பங்குனி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனாட்ல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து “கருணை மாதா பிரசீடியம்” என்னும் பெயரில் 18 பேரை அங்கத்தவராக கொண்ட புதிய மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.

By admin