தமிழின அழிப்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான சர்வதேச நீதி கோரி, சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினமான ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு கிழக்கின் பலபகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்தில், தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த இப்பேரணி யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா முன்றலில் ஆரம்பமாகி செம்மணி பிரதேசத்தை சென்றடைந்தது.

இப்பேரணியில் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin