டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதயநாதர் சபையினரும் இரண்டாம் கட்டமாக தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் கிளிநொச்சி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் உதவியுடன் மாசி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் கிளிநொச்சி பங்கை தரிசித்து அங்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு பங்குமக்களிடம் சேகரித்த 350,000 ரூபாய் பெறுமதியான உதவிப்பொருட்களை வழங்கிவைத்தனர்.

By admin