யாழ். மறைக்கோட்ட இறைமக்கள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி நிதி உதவியையும் பொருள் உதவியையும் அண்மையில் வழங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ். மறைக்கோட்ட பங்கு மக்கள் இணைந்து மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுத்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்களும் மறைக்கோட்ட முதல்வரும் பதுளை மாவட்டத்தை தரிசித்து மறைமாவட்ட ஆயர் யூட் நிஸாந்த சில்வா அவர்களிடம் ஒரு மில்லியன் ரூபாய் பணத்தொகையையும் கரித்தாஸ் USCOD நிறுவனத்திடம் சேகரித்த உதவிப்பொருட்களையும் வழங்கிவைத்தார்கள்.

