யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினர் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி அத்தியாவசிய உதவிப்பொருட்களை வழங்கியுள்ளனர்.
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் வழிகாட்டலில் மார்கழி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பிரதேசங்களை தரிசித்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிவைத்தனர்.

