கிளிநொச்சி மறைக்கோட்ட மக்கள் கண்டி, பதுளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை அண்மையில் வழங்கியுள்ளனர்.

இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும் நோக்கோடு கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு மக்கள் இணைந்து மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுத்த இந்நிகழ்வில் பங்குத்தந்தையர்களும் மறைக்கோட்ட முதல்வரும் கண்டி, பதுளை, மன்னார் மாவட்டங்களை தரிசித்து அங்கு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கிவைத்துள்ளனர்.

மறைக்கோட்ட முதல்வருடன் இணைந்த குழுவினர் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டி, பதுளை மாவட்டங்களிலும் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று மன்னார் மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் இவ் உதவி வழங்கும் நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

By admin