முல்லைத்தீவு மறைக்கோட்ட இறைமக்கள், குருக்கள், துறவிகள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி உதவிப்பொருட்களை மார்கழி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கியுள்ளனர்.

இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடனான தமது உடனிருப்பையும் அக்கறையுடன் கூடிய தோழமை உறவையும் வெளிப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் மறைக்கோட்ட குருக்களும் துறவிகளும் இணைந்து பதுளை மாவட்டத்தை தரிசித்து அங்கு பசறை, லுணுகல மற்றும் மடுல்சீம பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள், ஆடைகள், பாதணிகளென 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை வழங்கிவைத்ததுடன் மக்களின் பேரிடர் தொடர்பான அனுபவங்களையும் கேட்டறிந்தனர்.

By admin