டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு மிருசுவில் பங்கு மக்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.
பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q.ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மக்குமக்களிடம் சேகரிக்கப்பட்ட 115,000 ரூபாய் பணத்தொகை மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் பங்கின் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ் உதவித்தொகையின் மூலம் 3000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தை சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 38 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

