டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபையினரால் ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
யாழ். மறைமாவட்ட புனித வின்சன்ட் டி போல் சபை பந்திகள் மூலம் சேகரிக்கப்பட்ட இவ் உதவிப்பொருட்கள் மன்னார் மறைமாவட்ட வின்சன்ட் டி போல் ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை ரஞ்சன் சேவியர் மற்றும் மத்திய சபை உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
யாழ். மறைமாவட்ட வின்சன்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து சபை ஆன்மீக இயக்குநரும் உறுப்பினர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களை மறைமாவட்ட அயர் இல்லத்தில் சந்திந்து கள நிலவரங்கள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்கள்.

