இளவாலை மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள் இணைந்து குருநாகல் மாவட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி உதவிப்பொருட்களை மார்கழி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும் நோக்கோடு அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்களும் மறைக்கோட்ட முதல்வரும் குருநாகல் மாவட்டத்திற்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கிவைத்துள்ளனர்.

இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜேசுதாஸ், அருட்தந்தையர்கள் மைக் மயூரன், சுமன், ஞானறூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin