டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதய நாதர் சபையினரும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் மன்னார் மறைமாவட்டம் விடத்தல்தீவு பங்கை தரிசித்து அங்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு பங்குமக்களிடம் சேகரித்த 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான உதவிப்பொருட்களை மன்னார் கரித்தாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் ஊடாக வழங்கிவைத்தனர்.

