மரபுவழி கலைகளை பாதுகாக்கும் நோக்கில் மன்னார் மறைமாவட்டம் நானாட்டான் பங்கின் துணை ஆலயமான ஆவணம் ஊரிலுள்ள புனித கார்மேல் அன்னை ஆலய இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட புனித மரியாயின் புதுமையை கூறும் “ஞானசௌந்தரி” வடபாங்கு நாடக ஆற்றுகை நிகழ்வு யூலை மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸாண்டர் சில்வா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இரு நாட்கள் நடைபெற்ற இவ்அரங்க ஆற்றுகை நிகழ்வில் அரங்கிலும் அரங்க பின்ணணியிலும் 100ற்கும் அதிகமான கலைஞர்கள் பங்பற்றியிருந்தனர்.

இந்நாடகம் ஆவணம் ஊரை சேர்ந்த அமரர் விசுவாசம் சந்தியோகு முத்தையா அவர்களால் எழுதப்பட்டு அண்ணாவியார்களான கலைமாமணி திரு. செபஸ்ரியான் மாசிலாமணி மற்றும் செழுங்கலை வித்தகர் திரு. சவிரிமுத்து யோசப் குணசீலன் ஆகியோரால் நெறியாள்கை செய்யப்பட்டது.

இவ் ஆற்றுகையின் முதல்நாளன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களும் இரண்டாம் நாளன்று மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

By admin