மறைக்கல்வி ஞாயிறு தின சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள், மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு, இசை நிகழ்வு என்பனவும் இடம்பெற்றன.

 

By admin