கொழும்பு விவேகானந்த சபையினரால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான சைவசமய பாட பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.

இப்பரீட்சைக்கு தோற்றிய யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோக.த..க பாடசாலையின் மூன்றாம் தர மாணவிகளான மதுசிகா ஜெயக்குமார், பவிஸ்கா பாலச்சந்திரன் A+ சித்தியை பெற்றுக்கொண்டதுடன் பாடசாலையின் 138 மாணவர்கள் A,B.C தர சித்திகளை பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோக.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச எழுத்தறிவுதின சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை அங்கு நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்” என்னும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் எழுத்தறிவை மேம்படுத்தும் சஞ்சிகை ஆக்கம், சொல்லாக்கம், வாசிப்பு போன்ற போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin