வட மாகாண பாடசாலைகளின் ஆரம்பபிரிவு மாணவர்களிடையே மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி யூன் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 03, 04 மாணவர்கள் ஆண்களுக்கான பிரிவு போட்டியில் இரண்டாம் இடத்தையும், தரம் 5 மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
அத்துடன் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தம் மற்றும் ஜுடோ போட்டிகள் கடந்தவாரம் முல்லைத்தீவில் நடைபெற்றன.
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் செல்வன் எட்சண்ரா 75-80 கிலோகிராம் எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் செல்வன் டிலக்சன் 65-70 கிலோகிராம் எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், செல்வன் றொசினோ 55-60 கிலோகிராம் எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் செல்வன் டில்~hந்த் 45-50 கிலோகிராம் எடைப்பிரிவு ஜுடோ போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.