கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கிற்குட்பட்ட ஜெயந்நிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் பயன்பாடு தொடர்பான கருத்தமர்வு ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக இயக்குநர் அருட்தந்தை நியூமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் கிளிநொச்சி மாவட்ட செயலக விஞ்ஞான தொழில்நுட்ப அலுவலர் திரு. முரளிதரன் அவர்கள் வளவாளராக கலந்து பங்கு மக்களை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 80 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
அத்துடன் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்ப நல கருத்தமர்வும் அன்றைய தினம் செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கருத்தமர்வும் இடம்டபெற்றன.
இக்கருத்தமர்வை அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் மற்றும் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட் ஆகியோர் கலந்து நெறிப்படுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் 90 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.