ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஊர்காவற்றுறை காவலூர் கலைக்கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட புனித யாகப்பர் சரிதையைக் கூறும் “செந்தூது” நாட்டுக்கூத்து ஆற்றுகை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

காலஞ்சென்ற புலவர் பிரான்சிஸ் மிக்கேல்பிள்ளை அவர்களின் எழுத்துருவாக்கத்தில் அன்ரனி பெர்னான்டோ ஜெனிபர் அவர்களின் நெறியாள்கையில் மேடையேற்றப்பட்ட இக்கூத்தில் அரங்கிலும் அரங்க பின்ணணியிலும் 30ற்கும் அதிகமான கலைஞர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஊர்காவற்றுறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி தக்சாயினி செல்வகுமார் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கான நிதியனுசரணையை ஊர்காவற்துறை புனித யாகப்பர் ஆலய கனடா ஒன்றியம் வழங்கியிருந்தது.

By admin