சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஓல்ரன் புனித மார்டின் ஆலயத்தில் நடைபெற்றது.
பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒப்புரவு அருட்சாதனம், சிலுவைப்பாதை நற்கருணை ஆராதனை, குணமாக்கல் வழிபாடு, தவக்கால சிந்தனை, திருப்பலி என்பன இடம்பெற்றன.
தவக்கால சிந்தனையை இந்நியா கோயம்புத்தூர் மறைமாவட்ட அருட்தந்தை ஜொனி அவர்கள் வழங்கியதுடன் திருப்பலியை அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

