சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகங்கள் ஒன்றிணைந்த ஒளிவிழா மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை Oensingen, Bienken மண்டபத்தில் நடைபெற்றது.
பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் தலைமையில் மத்தியக்குழுவின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடல்கள், நாடகங்கள், கரோல் கீதம், பேச்சு போன்ற கலைநிகழ்வுகளுடன் சிறப்பு நிகழ்வுகளாக ஞானசவுந்தரி நாட்டுக்கூத்து மற்றும் திருமதி கயல்விழி அன்ரனி டண்சன் அவர்களின் நெறியாள்கையில் உருவான இசை உரை நாடகமான கன்னியின் கண்மணிக்கு அகவை 2025 என்பனவும் மேடையேற்றப்பட்டன.
பாசல் மாநில ஆயர் பேரருட்தந்தை பீலிக்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அமல மரித்தியாகிகள் சபையின் ஆசியா – ஓசியானிக் ஆலோசகர் அருட்தந்தை யூஜின் பெனடிற் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஆபிரிக்க மறைபோதக சபையின் அகில உலகத்திற்கான பிரதி தலைவர் அருட்தந்தை லியோ, யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஸ்கரன் ராஜ் மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை நிகஸ்ரன், கப்புச்சின் சபை அருட்தந்தை பவுல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

