சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத நிறைவின் சிறப்பு செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இப்பேரணி சுன்னாகம் புனித அந்தோனியார் ஆயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்தின் ஊடாக நாக்கியபுலம் லூர்து அன்னை ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் இடம்பெற்றதுடன் இப்பவனியில் பங்குமக்கள், இந்து சமய மக்களென பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin