சுன்னாகம் பங்கில் நல் ஆலோசனை மாதா மரியாயின் சேனை பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டதன் 69ஆம் ஆண்டு நிறைவுவிழா மார்கழி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து மாலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

சேனை தலைவர் திரு. யேசுரட்ணம் றட்ணபோஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் உரைகளும் இடம்பெற்றன.

இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மறைக்கோட்ட கியூரியா அங்கத்தவர்கள், அயற்பங்கு பிரசீடிய அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin