தாத்தா பாட்டியர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து சுன்னாகம் பங்கிலுள்ள ஆலயங்களில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏழாலை புனித இசிதோர் மற்றும் சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்திலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளின் ஆரம்பத்தில் தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகளால் மாலை அணிவிக்கப்பட்டு ஆலயத்திற்குள் அழைத்து வரப்பட்டு சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

திருப்பலி நிறைவில் முதியோர்களால் கேக் வெட்டப்பட்டு அவர்களுக்கான அன்பளிப்புக்கள் பேர்ப்பிள்ளைகளால் கொடுக்கப்பட்டதுடன் ஏழாலை புனித இசிதோர் ஆலயத்தில் முதியோர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin