சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்கின் கத்தோலிக்க ஆசிரிய சங்கத்தின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் நடைபெற்றன.

ஒன்றுகூடல் நிகழ்வில் கல்விப்பணியில் 25 ஆண்டுகளை நிறைவுசெய்த ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் கா.பொ.த சாதாரண தர பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான பரிசளிப்பும், புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் மறைபரப்பு ஞாயிறை முன்னிட்டு சுன்னாகம் பங்கு ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வுகளும் அண்மையில் நடைபெற்றன.

பங்குத்தந்தை அவர்களின் வழிநடத்தலில் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்திலும் 19ஆம் திகதி ஏழாலை புனித இசிதோர் மற்றும் சூராவத்தை புனித திரோசாள் ஆலயங்களிலும் இடம்பெற்ற சந்தை நிகழ்வுகளில் பங்குமக்கள ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin