சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.