சில்லாலை பங்கிற்குட்பட்ட புனித யோசேவாஸ் திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

15ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் திரிதின வழிபாடுகள் ஆரம்பமாகுமெனவும் 17ஆம் திகதி மாலை 4:30 மணிக்கு செபமாலையுடன் நற்கருணை விழாவும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருவிழாத் திருப்பலியும் நடைபெறுமெனவும் திருத்தல பரிபாலகர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin