சில்லாலை பங்கில் ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு தை மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் சமூக தொடர்பாடல் ஆண்டை மையப்படுத்தி இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊட கமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் “சமூக தொடர்பாடலும் கத்தோலிக்க திருஅவையும் எமது குடும்பங்களும்” என்னும் தலைப்பிலும் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலைய இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் “சமூக தொடர்பு சாதனங்கள் குடும்பங்களில் நேர்முகமாகவும் எதிர்முகமாகவும் செலுத்தும் பங்களிப்புக்கள்” என்னும் தலைப்பிலும் கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை அலோய் அவர்கள் “மறைந்த திருத்தந்தையின் இறுதி ஏடாகிய கூட்டொருங்கியக்க ஏடும் தற்கால திருத்தந்தையின் டிலக்சி தே ஏடும்” என்னும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளில் சில்லாலை பங்கிற்குட்பட்ட சில்லாலை, சங்கானை, மூளாய் ஆலயங்களின் அருட்பணிச் சபை உறுப்பினர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

