யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் மணற்காடு நடுக்குடத்தனை வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநரும் மணற்காடு பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோரால் “சிலுவையோடு பயணம்” எனும் மையக்கருத்தில் சிலுவைப்பாதை நிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு தியானம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

