குருநகர் பங்கின் சிறுத்தீவு புனித லூர்த்து அன்னை சிற்றாலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்க அருட்தந்தை பாலதாஸ் பிறாயன் அவர்கள் மறையுரையாற்றினார்.

இத்திருப்பலியில் 500ற்கும் அதிகமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin