திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலும் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நோக்கோடு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள், ஓவிய கைவினைப் பொருட்களின் கண்காட்சி ஐப்பசி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றுவருகின்றது.

கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றுவரும் இக்கண்காட்சியின் ஆரம்பநிகழ்வில் வடமாகாணக் கல்வித் திணைக்கள உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. நாகரத்தினம் ராஜன்; அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள், ஓவிய பாட ஆசிரியர்கள், ஆர்வலர்கள், திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப் பாடத்தைப் பயில்கின்ற மாணவர்களதும் அயல் பாடசாலைகளில் பயில்கின்ற மாணவர்களதும் ஆக்கங்களைக் கொண்டமைந்த இக்கண்காட்சிக்கான அனுசரணையை திருமறைக்கலாமன்ற மூத்த அங்கத்தவர் கலாபூஸணம் அமரர் யோசேப் அவர்களின் குடும்பத்தினர் வழங்கியதுடன் இக்கண்காட்சி 06ஆம் திகதி திங்கட்கிழமை இன்று நிறைவடையவுள்ளது.

By admin