தீவகம், சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த இவ்வருடமும் ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் மாசி மாதம் 21ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும் மாசி மாதம் 28ஆம் திகதி பேராலயம் நாவாந்துறை பங்குகள் தவிர்த்து யாழ்ப்பாண மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 07ஆம் திகதி முல்லைத்தீவு, கிளிநொச்சி மறைக்கோட்டங்கள் மற்றும் பேராலய பங்கிற்கும், பங்குனி மாதம் 14ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டம் மற்றும் நாவாந்துறை பங்கிற்கும், பங்குனி மாதம் 21ஆம் திகதி பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கும் பிரத்தியேகமான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பங்குனி மாதம் 28ஆம் திகதி பொது வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
