தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி இடம்பெறுமெனவும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நற்கருணைவிழாவும் 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 06.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுமெனவும் அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருவிழா மற்றும் நற்கருணைவிழாவிற்கு வருகைதரும் பக்கதர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரிபாலகர் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
471 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருத்தலம் யாழ் மறைமாவட்டத்தின் புராதனமானதும் முதன்மையானதுமாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.