தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இறுதி வார வழிபாடு பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் பொது வழிபாடாக நடைபெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பன இடம்பெற்றன.
இத்தியானத்தில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

