சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல சுற்றுமதில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து மதிலுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
தொடர்ந்து யாழ் மறைமாவட்டத்தின் முதன்மையானதும் 486 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மதில் கட்டுமானப்பணிக்கு மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலிருந்தும் அன்பளிப்பை பெறும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்ணோ, அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

