மலேசியா உத்தரா பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘சம்பந்தன் பைந்தமிழ் சுடர் – 5” விவாதப்போட்டி டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது.
இலங்கை தமிழ் விவாதக் குழுவின் இணைந்த வழிநடத்தலில் இடம்பெறும் இப்போட்டியில் இலங்கை தமிழ் விவாத அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விவாத அணித் தலைவர் செல்வன் பிலிப் லியோனார்ட் மைக்கேல் ஜெனுசன் அவர்கள் பங்குபற்றியுள்ளார்.
மலேசியாவில் நடைபெறும் இலங்கை – மலேசிய மாணவர்களுக்கிடையிலான ஒன்றுகூடலில் இக்குழுவினர் பங்குபற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

