மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “சமகால கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்” நிகழ்வு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
“கிறிஸ்து, புதிய உலகின் தரிசனமாகப் பிறக்கிறார்” எனும் தொனிப்பொருளில் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலகுமாரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் தற்காலச் சூழல்கள், அனர்த்தங்களுக்குப் பொருள் தேடும் கிறிஸ்து பிறப்புப் பாடல்களை உருவாக்கி பாடினர்.
கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரிக் குருமாணவர்களும் தாம் உருவாக்கிய இரண்டு பாடல்களை இந்நிகழ்வில் பாடியதுடன் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் சிறப்பு அருளுரையையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்பணியாளர்கள், குரு மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்து செபித்தனர்.

