பண்டத்தரிப்பு பங்கின் சண்டிலிப்பாய் புனித சின்ன திரேசாள் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
சண்டிலிப்பாய் புனித சின்ன திரேசாள் ஆலயம் 1923ஆம் ஆண்டு கொட்டில் ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டு 1925ம் ஆண்டு சிறிய ஆலயமாக அமைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.