யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கோப்பாய் பங்கில் முன்னெடுத்த குடும்ப விழிப்புணர்வு கருத்தமர்வு மாசி மாதம் 15ஆம் திகதி கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் கலந்து போதைப்பொருள் பாவனை சமூக தொடர்பு சாதனங்களின் முறையற்ற பாவனை தொடர்பாக கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் 150ற்கும் அதிகமான இறைமக்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

