உருத்திரபுரம் பங்கிற்குட்பட்ட கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin