கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் தங்கள் குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்து திருநிலைப்படுத்தப்பட்ட புதிய குருக்கள் இணைந்து ஒப்புக்கொடுத்த நன்றித்திருப்பலி கார்த்திகை மாதம் 24ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை பிரியதர்சன், யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தையர்கள் பொன்ராசா டினுஸன், அலெக்சாண்டர் றொகான் டியோனி, கிறிஸ்ரி ஞானராஜா றொகான், லூயிஸ் அன்ரனி பஸ்ரியன் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் புதிய குருக்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

