தாத்தா பாட்டி தினத்தை சிறப்பித்து கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகளால் மாலை அணிவிக்கப்பட்டு ஆலயத்திற்குள் அழைத்து வரப்பட்டு சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் முதியோருக்கான மகிழ்வூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இம்மகிழ்வூட்டல் நிகழ்வில் திரு. கரன்சன் ஜெகன் அவர்கள் வளவாளராக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் ஊடாக முதியோரை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 35ற்கும் அதிகமான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin