செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் இனப்படு கொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் தாயகச்செயலணி அமைப்பினால் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம் ஆவணி மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி 28ஆம் திகதி வரை நடைபெற்றது.

தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், இளையோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin