கூழாமுறிப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களும் முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் இயங்கும் கப்புச்சீன் அருட்தந்தையர்களின் ஊயிவையட ஊயஅpரள மாணவர்களும் இணைத்து முன்னெடுத்த புனிதர்களின் படையெடுப்பு அணிவகுப்பு நிகழ்வு கார்த்திகை மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூழாமுறிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற படையெடுப்பு மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி முள்ளியவளை புனித திரேசம்மாள் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

மறைக்கல்வி மாணவர்கள் புனிதர்களைப் போல் உடையணிந்து படையெடுப்பில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 60 மறைக்கல்வி மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin