கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள் இலங்கை நாட்டிற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்து குருக்கள், துறவிகள், பொதுநிலையினரை சந்தித்து கூட்டொருங்கியக்க செயல்முறையில் எழுந்த பிரச்சினைகள் குறித்தும் நாட்டில் திருச்சபைக்குள் ஒற்றுமை மற்றும் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிகழ்வுகளின் ஒரு அங்கமாக யூலை மாதம் 21ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை நாட்டில் பணியாற்றும் குருக்களை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் சந்தித்து கூட்டொருங்கியக்க மாநாட்டின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் வத்திக்கான் தூதரக துணைத்தலைவர் மொன்சிஞ்ஞோர் ராபர்தோ லுச்சினி, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல், இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ், காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் சிங்சிலி விக்ரமசிங்க மற்றும் 350ற்கும் அதிகமாக குருக்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin