யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட குர்ச்சியோ இயக்க அங்குரார்ப்பண நிகழ்வு 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் இவ் அமைப்புக்கு பொறுப்பான அருட்தந்தை இக்னேசியஸ் அவர்கள் கலந்து குர்ச்சியோ இயக்கம் பற்றிய அறிமுகத்தை வழங்கி இவ்அமைப்பை யாழ். மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
தொடர்ந்து இவ்இயக்கத்தை பங்குமட்டத்தில் எவ்வாறு ஆரம்பிப்பது என்பது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கழக அங்கத்தவர்கள், பங்கு பிரதிநிதிகளென 50 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
கத்தோலிக்க நம்பிக்கையை ஆழப்படுத்தவும் நல்;கிறிஸ்தவ வாழ்வை வாழவும் உதவுகின்ற திருஅவையின் அங்கீகாரம்பெற்ற சர்வதேச கத்தோலிக்க அமைப்பான குர்ச்சியோ இயக்கம் 1944ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்தவ மதம் தடைசெய்யப்பட்டு குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு கொல்லப்பட்டபோது மனம் உடைந்த கிறிஸ்தவர்களுக்கு புத்துயிர் கொடுக்க உருவாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.