குருநகர் புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மண்டப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா மாசி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து புதிய மண்டபத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

